Monday, July 7, 2014

மழைப்பாடல்- ராமராஜன் மாணிக்கவேல் கடிதம்

அன்புள்ள திரு.ஜெ..வணக்கம்.

1) சில கேள்விகள் கேட்க நினைக்கின்றேன். இதை யதார்த்தமாக எடுத்துக்கொள்ளுங்கள். இடையூராக நினைக்கவேண்டாம்.
2)   அதிரதன் அஸ்தினாபுரியின் தேரோட்டி அது இன்னும் காட்டப்படவில்லை. அதிரதன் குறிப்பாக திருதராஸ்டிரன் தேரோட்டி. 
2)   3) ராதேயனை வளர்க்கவேண்டும், அவனை உயர்த்தவேண்டும் என்பதற்காக அதிரதன் விடைபெறும்போது சஞ்சயன் திருதராஸ்டிரன் இடம் வந்து சேர்கிறான்.அதிரதனால் நம்பிக்கை சான்று அளிக்கப்பட்டு. சஞ்சனை நீங்கள் பதின்பருவ சிறுவனாகக் காட்டுகின்றீர். அவன் அதிரதனுக்கு நிகரான ஒரு ரதசாரதியாக இருக்கும் இளைஞன். திருதராஸ்டிரனின் அணுக்க ரதசாரதியாக வந்துசேரும் சஞ்சன் திருதராஸ்டிரனின் அகவிழியாகவே ஆகிவிடுகின்றான்.
3)   சஞ்சனை விதுரன் திருதராஸ்டிரனுக்கு அறிமுகம் படுத்துவது நன்றாகவே உள்ளது. விதுரனுக்கு அவன் அறிமுகம் படுத்தப்பட்டது அவன் பிறப்பின் கதையின் வழியாக மட்டும் சொல்கின்றீர். அதிரதன் முக்கியம் குறைந்துப்போகின்றதே. 
4)   4) மன்னன் சந்தனுவால் கண்டெடுக்கப்பட்ட வளர்க்கப்படும் கிருபனும், கிருபியும் இன்னும் காட்டப்படவே இல்லை. 
5)   5) திருதராஸ்டிரன் முடிசூடும் இந்த நாளில் கூட குலகுருவாகிய கிருபாச்சாரியார் காட்டுப்படாதது ஏன்?  

நன்றி
வாழ்க வளமுடன். 

ராமராஜன் மாணிக்கவேல்


அன்புள்ள மாணிக்கவேல்
வியாச மகாபாரதத்தில் இதுவரைக்குமான கதை சம்பவ பர்வம் 133 ஆவது அத்தியாயம் வரை வந்துள்ளது- அதில் நீங்கள் சொல்லும் எதுவும் இல்லை. கர்ணனை ‘ஒரு தேரோட்டி’யான அதிரதன் என்று மட்டுமே வருகிறது. அவன் அஸ்தினபுரியில் இருந்திருக்க முடியாது. பின்னர் வந்திருக்கலாம் என்பதே ஊகிக்கப்படுவது
வனபர்வத்தில் மீண்டும் இக்கதை சொல்லப்படும்போதுதான் அதிரதன் திருதராஷ்டிரனின் நண்பன் என்ற வரி வருகிறது - அதாவ்து அப்போது அவன் அஸ்தினபுரியில் திருதராஷ்டிரனின் நண்பனாக இருந்தான்
அதேபோல பல உபகதைக்குழப்பங்கள். பெட்டி யமுனையில் விடப்பட்டு அங்கிருந்து சர்மாவதி வழியாக கங்கையை அடைந்து என்று கதை. அதற்கு 10 நாள் ஆகும்! 

சஞ்சயன் பாண்டவர்களின் தலைமுறையைச் சேர்ந்தவன். அவர்களின் தந்தையின் தலைமுறையினன் அல்ல. இளையவன் என்றே மகாபாரதம் சொல்கிறது
கிருபரின் வருகை மகாபாரதத்தில் பிந்தித்தான் வருகிறது
ஜெ

ஓம் ஸ்ரீமுருகன் துணை
மிகவம் நன்றி. உங்கள் நேரத்தை எடுத்துக்கொள்ளக்கூடாது என்றுதான் நினைக்கின்றேன். வேறுவழித்தெரியவில்லை. உங்கள் பதிலில் பெரும் உவகை அடைகின்றேன். நன்றி.
நீங்கள் திருக்குறளுக்கு உரைஎழுதவேண்டும் என்பது எனது பணிவான வேண்டுகோள். உங்கள் காலம்தோறும் கவிதையும். சிங்கப்பூர் வாசகர் வட்டம் 25ஆண்டுவிழா உரையும் கேட்டேன். நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லாருக்கும் பெய்யும் மழையில் அன்று நினைந்தேன்.
விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே
பசும்புல் தலைகாண் பரிது.

விளக்கம்கேட்டு அகம்விரிந்து வான்தொட்டு மீண்டு வந்தேன்.

உங்கள் அற்புதமான  மணியாரங்கள் நடுவில் திருக்குறள் வைரமும் வைக்கப்படவேண்டும்.

நன்றி
வாழ்க வளமுடன் 

ராமராஜன் மாணிக்கவேல்