Monday, October 27, 2014

நீலமும் சந்தமும்




அன்புள்ள ஜெ

நீலம் இப்போதுதான் வாசித்தேன். முதலில் அவ்வப்போது வாசித்ததுடன் சரி. அதன் சந்தம் வாசிக்கத்தடையாக இருந்தது. வாசிப்பை மனசுக்குள் நிகழ்தியபோது அந்தத் தடை இருந்தது. மெல்லச் சொல்லிக்கொண்டே வாசித்தபோது அற்புதமாக இருந்தது

தமிழில் இருந்து சந்தத்தைப்பிரிக்கவே முடியாது என்று தோன்றியது. சந்தம் தமிழுக்கு அற்புதமான ஒரு அழகை அளிக்கிறது. ஆங்கிலத்துக்கு ஈற்றடி மோனை [ ரைம்] அந்த அழகை அளிக்கிறது.

நீலம் எல்லாவகையிலும் ஒரு மாஸ்டர்பீஸ் ஜெ. தொடர்ந்து உங்களை நீங்களே தாண்டிச்சென்றுகொண்டிருக்கிறீர்கள். இதோடு மேட்ச் ஆகும் இடங்கள் என்றால் கொற்றவையின் சில பகுதிகள் மட்டும்தான்.


நீலம் வழியாக உருவாகிவரும் கண்ணன்- ராதை ஒரு லெஜண்ட் மட்டுமாகவே இருக்கவேண்டும் மனிதர்களாக ஆகவேகூடாது என்று நீங்கள் நினைத்திருப்பதை அந்த மொழிநடைமூலம் சாதித்துவிட்டீர்கள்.

சாதாரணமகாச் சொல்லியிருந்தால் கிருஷ்ணன் மனிதனாகி இருப்பான். அதோடு அந்தக்காதலும் பரவசமும் earthly ஆக மாறி பொருளில்லாமல் போயிருக்கும். earthlu ஆன எந்த விஷயத்தை நம் மூளைதான் முதலில் சந்திக்கிறது

மூளையே இல்லாமல் வெறும் உணர்ச்சிப்பரவசத்தால் வாசிக்கவேண்டிய படைப்பு நீலம். அதை சாத்தியப்படுத்தியிருப்பது அந்த சந்தமுள்ள மொழிதான்

வாழ்த்துக்கள்

குரு