Saturday, December 27, 2014

துரியோதனனின் நிழல்



ஜெசார்

வெண்முரசின் இந்த அத்தியாயத்தில் துரியோதனனின் கதாபாத்திரத்தின் உள்மனசை நுட்பமாக பார்க்க முடிந்தது. குற்றவுணர்ச்சியால் துன்புறும் துரியோதனன் தன் தந்தைக்குக் கண் இல்லை என்பது மிகநல்ல விஷயம் என உணரும் இடம் மிகவும் மென்மையாகச் சொல்லப்பட்டிருந்தாலும் மனதில் தைத்தது

பீமன் செத்ததும் இவனிக்கும் வாழ்க்கை இல்லை என்று ஆகிவிட்டது. என்னசெய்வதென்றே தெரியவில்லை. கதாயுதத்தையும் விட்டுவிட்டான். ஆனால் அவன் சாகவில்லை என்று தெரிந்ததும் மகிழ்ச்சி அடைகிறான். அவனுடைய கதாபாத்திர அமைப்பு தெளிவாகத் தெரியும் இடம் அது

துரியோதனன் நிழலாக குண்டாசி இருக்கிறான். அவனுடன் இருப்பது இவனிடமிருக்கும் எல்லா துக்கமும்தான் இல்லையா?

சாரதி