Friday, February 20, 2015

வெண்முரசு தகவல் திரட்டும் பணி




வெண்முரசில் வகை வகையாக ஏராளமான தகவல்கள் வருகிறது. அதை எல்லாம் திரட்டி தொகுத்து வைப்பது ஒரு பெரிய பணி. ஏற்கனவே ஐந்து நாவல்கள் தகவல்கள் திரட்டப்படாமலே முடிந்துவிட்டது. இனியாவது அந்த முயற்சியை தொடங்கலாம் என்று நினைக்கிறேன்.
அன்றாடம் படிக்கும் அத்தியாயங்களில் பார்க்கும் தகவல்களை எடுத்து சேமித்தாலே போதும். காலப்போக்கில் அது பெரிய தரவு தொகுப்பாகிவிடும். ஒருவருக்கு மேல் சேர்ந்து இந்த வேலையை செய்தால் இன்னும் சுலபமாக செய்யலாம்.
இதற்காக ஒரு கூகுல் டாக்குமென்ட் உருவாக்கியுள்ளேன். இந்த தகவல் திரட்டும் பணியில் விருப்பமுடையவர்கள் இங்கு தெரிவித்தால் உங்களுக்குடன் அந்த டாக்குமென்டை பகிர்ந்துகொள்கிறேன். நீங்கள் அதில் தகவல்களை திரட்டி சேமிக்கலாம், தொகுக்கலாம். மற்றவர்கள் அனைவரும் தகவல்களை பாரக்க முடியும்.


மெண்பொருள் எழுதி சில வேலைகளை செய்யலாம் என்று இருக்கிறேன். விருப்பமுள்ள techies தெரியப்படுத்தவும்.

நன்றி
ஹரீஷ்