Thursday, February 19, 2015

ஆழ்எரி உலகம்

உவகை போல மென் சிரிப்பு போல வந்தது. மனம் தாவி செல்லாமல், வரிவரியாக வார்த்தை வார்த்தையாக  படித்து சென்றது. அவன் செய்வதையும் அவள் உடைவதையும் பொங்கி பொங்கி வாங்கி கொண்டு படித்தது... கலவரமாகி இன்னொரு பக்கம் அதை பார்த்து கொண்டு இருந்தது. இருவரும் மிக சரியான வயதுடன் இருந்திருப்பர் என தோன்றியது. இவ்விதமே அடுத்த மூன்று நாட்களும் சென்று இருக்கும் என சிரித்தது. அவனின் சின அலைகள் அடங்கி தூங்குவது கண்டு ஆகா அப்பாடா என்றது. சுருங்கி கிடப்பவளை தலை கோத விரலில் மனம் இறங்க, அவன் அங்கே கேச விரிப்பை சுண்டினான். 

மின்னல் என இடித்து  பளீர் என காட்டின் வெளிச்சம் காட்டி சென்ற பகுதி. அப்படி ஒரு கணம் அல்லது ஒரு நாள் போல காலம் உறைந்து தன் ஆழ் உறங்கும் எரியை, கசடை காட்டி நகைக்கும் நாள் இன்று . அவள் உடைந்து இரண்டாகி நின்றது. ஒரு பக்கம் மிக அகங்காரமாக இருந்ததனால் மட்டுமே இரண்டுக்கும் இடையே அவளால் பயணிக்க முடிந்தது என்று பட்டது. ஒரு வேலை இது அவளுக்கு முதல் தனிமை. அல்லது முதல் வெறுமை. 

அர்ஜுனனின் ஆழ் மிருகம் கொண்ட சினமும் இன்று கொண்ட உறக்கமும் மிக நன்று அயன்மீர். எங்கே பற்றி கொண்டது இந்த மோதல்கள் பற்றிய யோசிப்புகளும் இங்கன ஆழ் மன எரிமலைகளை வெளிஎடுத்து வருவதாக எழுத்துகள்? அக்கினிபிரவேசம் என்ற பகுதியில் கன்றி போதலை, முதற்கனலில்  அம்பையின் மலர்ந்து கருகி இறுகி போன எரிமலையின் சூட்டை என பெண்களின் வீழ்தல் அல்லது ஆணின் வீங்கல்கள் என எப்படி கொண்டு வருகீர்கள் ...

அன்புடன் லிங்கராஜ்