Monday, February 9, 2015

மலைப்பாறை



ஜெ,

உவமைகளைப்பற்றி ஒருவர் எழுதியிருந்தார். இன்றைக்கு வந்த வெண்முகில்நகரம் நாவலில் இந்த வரி அற்புதமான உவமை. மழை பெய்து சிவந்த மண்ணால் ஆன வடக்கத்தி மலைகளின் மேல் இருக்கும் கருப்பான பாறை எப்படி மேலும் கருப்பாகிறது என்பதை

உச்சிமலைப் பாறைகள் வானருவியிலாடிக் குளிர்ந்து கருக்கொண்ட முலைமேல் காம்புகள் என கருமை கொள்கின்றன.

என்ற உவமை மூலம் சொல்லியிருந்தீர்கள். அதே அத்தியயாத்தில் அழகான இன்னொரு விஷயம் வருகிறது. அதனுடன் இந்த வரி அழகாக சம்பந்தப்பட்டுக்கொள்கிறது

பாஸ்கர்