Monday, March 16, 2015

இருவிழிகள்



ஜெ சார்

வெண்முரசின் ஆச்சரியங்களில் ஒன்று அதில் நாம் எப்படி ஈடுபடுகிறோம் என்பது. ஆரம்பத்திலிருந்தே வெவ்வேறு கதாபாத்திரங்களுடன் நம்மை நாம் இணைத்துக்கொள்கிறோம். நான் ஆரம்பத்திலே ரொம்ப அடையாலப்படுத்திக்கொண்ட கதாபாத்திரம் என்றால் விதுரர்தான். விதுரரின் கூடவே போய்த்தான் நான் வென்முரசையே வாசித்தேன். ஆனால் அவருக்கு வயதானபோது மெதுவாக அர்ஜுனன் பக்கம் சாய்ந்தேன்

இப்போது பூரிசிரவஸ் சாத்யகி இரண்டுபேருமே மனதை கவர்கிறார்கல். இருவருடனும் சேர்ந்தே சென்றுகொண்டிருக்கிறேன். இதுதான் ஆச்சரியமாக இருக்கிறது. இரண்டுபேரின் மனநிலையும் வேறு வேரு. ஆனால் இரண்டுபேரையுமே நான் என்று என்னால் கற்பனைசெய்துகொள்ள முடிகிறது

இப்படிக் கற்பனைசெய்துகொள்ளும்போது அவர்கல் செல்லும் நாடுகளையும் ஊர்களையும் மண்ணையும் நம்மாலும் துல்லியமாகப்பார்க்கமுடிகிறது. பூரிசிரவஸ் வழியாக இமையமலையையும் சாத்யகி வழியாக துவாரகையையும் பார்ப்பது பெரிய அனுபவன்

நன்றி

சிவா