Friday, June 5, 2015

துவக்கம்



முதல் அத்தியாயத்திலேயே ஏதோ ஒன்று கவர்ந்து இழுக்க அதன்பிறகு அதிலேயே லயித்துப்போய் உள்ளிழிக்கப்படுவதுதான் ஜெ நாவல்களில் விஷ்ணுபுரம் தொட்டு இதுவரைக்கும் எனக்கு நிகழ்ந்துள்ளது. முதற்கனலில் நாகங்களின் பிணைப்பின் மூலம் உலகின் உருவாக்கம் மழைப்பாடலில் யுகங்களை பகடைகளாக்கி விளையாடுவதும் ப்ரயாகையின் துருவ சரித்திரமும நீலத்தின் எம்பாவாயும் அவ்வாறேயானது். நடுவில்  வண்ணக்கடலின் இளநாகன் கவிபாடும் துவக்கம் அனைத்திலும் வித்தியாசமானதாய் இருந்தாலும் மகாபாரதம் வருகையில் ஒவ்வொரு பாண்டவரும் காட்டை  அறியும் விதம் கவித்துவமானதான ஒன்றாய் கொண்டு சென்றது. அவ்வகையில் இந்திரநீலம் துவக்கம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. வாசகர்களின் உடனுக்குடனான வாசிப்பனுபவங்களே வெண்முரசு-ல் எனக்கு கிடைக்குமோர் added feature. வண்ணக்கடலையெல்லாம் venmurasu discussions மூலமாகவே அதிகம் புரிந்துகொண்டேன்.

காளிப்பிரசாத்