Wednesday, November 18, 2015

உருமாற்றம்

மிகச் சிறந்த உரு மாற்ற கலை வல்லுனனாக அர்ஜுனன் திகழ்கிறான். அக்ரூரராலேயே அடையாளம் காணப் பெறாமல் இப்பொழுது தாடி, மீசைக்குள் இருக்கும் அவன், காண்பவர் அனைவரும் மயங்கும் படியாக எப்படி ஃபால்குனையாக திகழ்ந்தான்? உருமாறும் கலை ஆடை, அணிகலன்களில் விட அசைவுகளாலேயே என்று நம் ஆசிரியர் கூறுகிறார்.அது உண்மையும் கூட. ஆனால் ஃபால்குனை மலை வணிகர்களுடன் காட்டில் பிரயாணம் செய்த போதும், எல்லையூரான சிவதத்தில் தங்கும் போதும், பிறகு மணிபுரி சென்ற போதும், முக முடி எப்படி வளராமல் இருந்தது? :) 

நீங்கள் சொல்லுகிறார் போல சுஜயனும், சுபகையும் ரொம்ப நேரமாக குறுக்கிடாமல் நம்மைப் போல மாலினியிடம் கதையை சுவாரஸ்யமாக கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்..! அப்படியே குறுக்கீடு இல்லாமல் தொடரட்டும்.  

சதபதரின் விஜயபிரதாபத்தில் அல்லி ராஜ்ஜியம் வருகிறதா, தெரியவில்லை. அதில் பத்து கதைகள், நாயகிகள் என்று கூறப் பட்டிருக்கிறது. இப்பொழுதுதானே மூன்று நாயகிகள் வந்திருக்கிறார்கள், அதனால் அதற்குள் முடிந்து விடுமா? விஜயனின் வீரப் பிரதாபங்கள் தொடரட்டும்.

நன்றி,

ராதிகா