Sunday, November 22, 2015

தாயம்

ஜெ

நீண்ட இடைவேளைக்குப்பின்னால் எழுதுகிறேன். நான் நடுவே கொஞ்சம் உடம்புசரியில்லாமல் ஆகி வெண்முரசை விட்டுவிட்டேன். ஒரு மாசமாக உக்காந்து படித்து முடித்து எட்டிவிட்டேன்

சுபத்திரா அபகரணம் மிக உற்சாகமான அத்தியயாம். அதில் நுணுக்கமாக நேமியின் கதையையும் கலந்துவிட்டீர்கள். ஆனாலும் அர்ஜுனனும் சுபத்திரையும் பேசுமிடங்களில் உள்ள காதல் அழகானது. அவள் அவனை தொட்டுக்கொண்டிருக்க விரும்புவதும் சரி பேச்சில் அவள் குழந்தையாக ஆகிவிடுவதும் சரி கொஞ்சம் கொஞ்சமாக அவனுடைய மனசுக்குள் புகுந்து எல்லாவற்றையும் பார்த்துவிடுவதும் சரி அழகானவை

ஆணுக்கும் பெண்ணுக்குமான உரையாடல் சுருக்கமாகவும் மாறி மாறி தாயம் உருட்டி விளையாடுவதுபோலவும் இருக்கும். அதை அழகாக எழுதியிருக்கிறீர்கள். நான் உங்கல் பழைய கதைகள் நாவல்கள் எல்லாவற்றையும் வாசித்தவள். உங்கள் பழைய கதைகள் எத்லுமே இந்த அளவுக்கு நுட்பமாக ஆண் பெண் உரையாடல் அமைந்ததில்லை

அகிலா