Wednesday, November 4, 2015

நிறை

துறந்து துறந்து சென்று துறக்க ஒண்ணாததென எஞ்சுவதே தங்கள் இருப்பென்றும் அதை நிறைவழியச்செய்யும் முறைமையே ஊழ்கமென்றும் இவர்களின் நெறிவழி வகுத்துள்ளது” என்றார் இளைய யாதவர்.
நிறைவடையச்செய்யும் என இருக்கவேண்டும்போல் தெரிகிறது.


தண்டபாணி துரைவேல்


8
துறக்க ஒண்ணாத இருப்பு என்பதே 'நான்' என உணரும் இன்பம். (அர்ஜுனன் உணர்ந்தது போல...) வளம், இன்பம் என அனைத்தையும் துறக்கும் அருகர்கள் அரியதிலும் அரியதான அந்த தூய இருப்பு என்ற உணர்வையும் துறப்பதே ஊழகம் என்று அவர்களின் நெறி உரைக்கிறது. இவ்வகையில் பார்த்தால் நிறைவழியச்செய்யும் என்பதே பொருத்தமானதாகத் தெரிகிறது.

அவ்வாறு இறுதி இருப்பையும், அது தரும் நிறைவையும் துறப்பதால் தான் அந்த அருகர்களின் காலடித் தடம் படிந்த பாதையில், அத்தடங்கள் மேல் கால் பதிக்காமல் செல்கிறான் கிருஷ்ணன். அந்த தூய இருப்பின் களியாட்டம் அல்லவா அவன் கொண்ட யோகம்.

அன்புடன்,
மகராஜன் அருணாச்சலம்.