Friday, January 22, 2016

விண்ணும் இருளும்






ஜெ

போகிற போக்கிலே வரும் சித்தரிப்பிலே கூட எளிதாக வரும் நுட்பம் நீங்கள் ஓர் உச்சநிலையிலே நின்று படைப்பதனால்தான் என நினைக்கிறேன். கர்ணன் இரு அமைச்சர்களைச் சந்திக்கிறான். ஒருவன் கருடன். பறவைக்கரசன். இன்னொருவன் பாதாளத்தின் அரசன். இருவரையும் சமமாகக் கொஞ்சிவிட்டு அவன் உள்ளே செல்கிறான். ஏனென்றால் அவன் சூரியனின் மகன்

நுட்பமான இடம். இதை நானே இன்னொருமுறை வாசிக்கும்போதுதான் உணர்ந்தேன்

ஜெயராமன்