Friday, April 15, 2016

வீரர்




மக்கள் வீரர்களை வழிபடுகிறார்கள். வீரர்களுக்கு தங்கள் குருதியை மகிழ்வுடன் அளிக்கிறார்கள். அவன் உண்ட குருதியின்பொருட்டே அவனை கொண்டாடி தெய்வமாக்குகிறார்கள்

ஜெ,

சமீபத்தில் வீரப்பன் , பிரபாகரன் விஷயத்திலேகூட இதைத்தான் பார்த்தோம் . நெப்போலியன், ஜெங்கிஸ்கான் என்று எல்லா ‘மக்கள் வீரர்களின்’ கதைகளிலும் இதுதான்

நீங்கள் ஜன்னல் இதழில் நாட்டுப்புறச் சாமிகளைப்பற்றி எழுதிவருகிறீர்க்ள். அதில் திரும்பத்திரும்ப மாவீரர்கள் எல்லாரும் மக்களைத்தான் கொன்று குவித்திருப்பதாக வரும். அவர்களுக்குத்தான் பயந்து கோழி கொடுத்து வழிபடுகிறார்கள். கொஞ்சம் கொஞ்சமாக தெய்வமாகி அருள்புரிகிறார்கள் அந்த வீரர்கள்

வரலாற்றின் அபத்தம் அளவிடமுடியாதது என்று நினைக்கிறேன்

செல்வா