Friday, April 15, 2016

அறிவுஜீவிகளின் திகைப்பு






ஜெ

ஜராசந்தனின் எழுச்சியில் உள்ள கவனிக்கத்தக்க அம்சம் பத்மரின் பதற்றம்தான். மற்றவர்களுக்கு ஜராசந்தன் ஒரு கோமாளி அல்லது கொடூரன். அவனால் அரசியலை ஒன்றும் செய்யமுடியாது என நினைக்கிறார்கள். ஏனென்றால் அரசியல் மிக நுட்பமானது, அதை பத்மர் போன்றவர்களே செய்யமுடியும் என்று நினைக்கிறார்கள். 

ஆனால் பத்மருக்குத்தெரியும், ஜராசந்தன் ஒரு பெரிய ஃபினாமினன் என்று. ஆனால் அது எப்படி நிகழ்கிறது என தெரியவில்லை. அதை விளக்கிக்கொண்டே இருக்கிறார். நடக்கும்போது திகைப்பு. அதன்பின் எப்படி நடந்தது, இப்படி நடந்திருக்கலாம் என்று விளக்கம். மீண்டும் அதிர்ச்சி. இப்படியே போகிறது அவரது பார்வை. 

இந்த இதே விஷயம் புலிகள் விசயத்திலும் நடந்ததைக் காணலாம். அறிவுஜீவிகள் திகைத்துதான் இருந்தனர். என்ன சொல்வதென்றே அவர்களால் முடியவில்லை.

மனோகர்