Monday, April 25, 2016

சமநிலை


இந்திரபிரஸ்தத்தின் ராஜசூயத்தின் செய்தியை புலவர் சூழ்ந்த அவையில் கேட்கும் ஜராசந்தனின் உடனடி எதிர்வினை மிக முக்கியமானது. அவன் கூடியிருக்கும் புலவர்களிடம் நந்தியைப் பற்றி பேசுகிறான். உண்மையில் அவன் எருது என்று தன்னைத் தான் குறிப்பிடுகிறான். பாரதத்தில் தன்னுடைய இடம் எது என்பதைத் தான் வினவுகிறான். நாற்களத்தின் சமநிலையில் தன் பங்கு என்ன என்ற குழப்பத்திற்கே அவன் விடை தேடுகிறான். பாரத அரசுகளின் சமநிலையை ஏற்படுத்தும் அடி நாதமாக, அடிப்படை தாளமாக தான் இருக்கிறோம் என்றே அவன் நம்புகிறான். அப்படியென்றால் அச்சமநிலை குலைவதாயின் முதல் அழிவு அந்தத் தாளமாகத் தானே இருக்கமுடியும்? தடுக்கவியலாமை(inevitable) என்பதன் ஓசையை அவன் ஆழ்மனம் கேட்டுவிட்டது. அதை மறைக்கவே அவன் அருவருப்பால் கொலை செய்வதையெல்லாம் பற்றி பேசுகிறான். மிகக் கூர்மையான வரிகள் நிறைந்த அத்தியாயம். ஒருவகையில் ஜர்சந்தனின் முக்கியத்துவம் மற்றும் பாரதப்போரின் அடிப்படை அரசியல் இரண்டையும் அனாயாசமாக விளக்கிய அத்தியாயம்.
அன்புடன்,
மகராஜன் அருணாச்சலம்.