Monday, May 2, 2016

துலாவின் சமநிலை



ஜராசந்தன் ஒரு புறம் பேரரசன். மறுபுறம் காட்டாளன். இன்று அவனது காட்டாளனுக்குரிய மனது அவனது அந்திமத்தை உய்த்துணர்ந்து விட்டது. ஆனால் அதை அவனில் இருந்த அரசனுக்கு அருமையாக உணர்த்தி விட்டது. அவன் தன் மகனுக்குக் கூறும் அனைத்தும் உண்மையில் அரசனுக்கு அமைச்சர் கூற வேண்டியவை. அவன் அவர்கள் குல வரலாறையும், கொடி வழியையும் கூறுகிறான். ஒரு அரசனாக அவன் எதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் எனக் கூறுகிறான். எல்லாவற்றுக்கும் மேலாக அவன் மகதத்திற்கு கொண்டுவந்த ஒரு காட்டு நியாயத்தை விளக்குகிறான். மகதர்களின் நாக குல குருதி வழி கூட அவன் நாக பாசனான கர்ணனிடம் கொண்ட பேரன்புக்குக் காரணமாயிருக்கலாம். 

அவன் கொடூர மனம் கொண்டு செயல்பட்ட ஏதோ ஒரு கிறுக்கன் அல்ல. அவனது ஒவ்வொரு கொடூர செயல்களுக்கும் வரலாற்றின் ஆழத்தில் எங்கோ நிறை வைக்கப்பட்டுக் கொண்டே இருந்திருக்கின்றன. அவன் உண்மையில் வரலாற்றில் எங்கோ தாழ்ந்த துலாத்தட்டை ஒரே வாழ்நாளில் நிலை செய்த ஒரு பேரரசன் என்றே இன்று தோன்றுகிறான். சரி தானே, துலா மாதத்தில் தானே தட்டுகள் சமநிலை கொள்ள இயலும்!