Thursday, July 21, 2016

வீரயுகம்



ஜெ,

நேற்று ஒருவர் ஒரு நல்ல கடிதம் எழுதியிருந்தார். வீரயுகத்தைச்சேர்ந்த ஒவ்வொன்றும் எப்படி இன்றைக்குக் குறியீடாக ஆகிவிட்டிருக்கின்றன என்று. உண்மையில் அவை குறியீடாக அல்லது ஆர்க்கிடைப் ஆக நமக்குள்ளே நின்று நம் செயல்களைத் தீர்மானிக்கின்றன. ஒருசங்ககாலத்து வீரன் இன்றைக்குள்ள தமிழ் இளைஞனுக்குள் ஆர்க்கிடைப் ஆக நிலைநிறுத்தப்படுகிறான். அவனுடைய எல்லா செயல்களையும் அவனே தீர்மானிக்கிறான்

அதேபோலத்தால் உலகம் முழுக்க நிகழ்ந்துகொண்டிருக்கிறது. ஆனால் இன்னொரு சுவாரசியமான அம்சம் என்னவென்றால் அந்தக்காலத்திலேயேகூட அதெல்லாம் யதார்த்தமாக சொல்லப்படவில்லை என்பதுதான். உண்மையில் அன்றைக்கு அதைச் சொன்னவர்ரகளேகூட அவையெல்லாம் அப்படியே குறியீடாக ஆகி மனதுக்குள் சென்று உறையவேண்டும் என்றும் அதெல்லாம் மக்களைப்பாதிக்கவேண்டும் என்றும்தான் நினைத்திருக்கிறார்கள்

யானையை வெட்டி வளைந்த வாளை அதன் கொம்புகளுக்கு நடுவே கொடுத்து நிமித்துவிட்டு மறுபடி போருக்குப்போவதை பற்றியெல்லாம் சங்க இலக்கியம் எழுதியிருப்பது இதனால்தான். அப்படிப்புரிந்துகொண்டால் இதெல்லாம் சில அடிப்படைகளை நிலைநிறுத்துவதற்காக ஒரு இமேஜினேட்டிவ் ஸ்பேஸில் நிலைநிறுத்தப்படுபவை என்பதைக் காணமுடியும்

மனோகர்