Friday, August 19, 2016

நகுலனும் சகதேவனும்





ஜெ

இந்நாலில்தான் நகுலனும் சகதேவனும் நுட்பமாக வெளிப்படுகிறார்கள். பொதுவாக மகாபாரதக்கதைகள் எதிலும் இரண்டுபேருக்கும் பெரிய இடம் கிடையாது. காலஞ்சென்ற என் தந்தையார் சொல்வதுண்டு. பாண்டவர்களில் மற்ற மூவரும் அடைந்த எல்லா துன்பங்களையும் இருவரும் அடைந்தார்கள், ஆனால் அவர்கள் இருவருக்கும் அதற்கான புகழ் கிடையாது. அதுதான் தலையெழுத்து என்று. அவர் இபியில் வேலைபார்த்தார். அவரைப்பற்றி அப்படிச் சொல்லிக்கொள்வார்

ஆனால் இநத இருவரின் கதாபாத்திரம் இப்போது தெளிவாக வருகிறது. சகதேவனுக்கு சஞ்சலங்களே இல்லை. ஊசலாட்டம் இல்லை. அவன் கதாபாத்திரம் வளர்வதுகூட இல்லை. அப்படிப்பட்டவர்கள் இருந்துகொண்டே இருப்பார்கள். ஆனால் பிளாக் ஆண்ட் வைட் அண்ட் கிரே கொண்டவர்கள்தான் கதாநாயகர்கள். நகுலன் ஒரு முதிரா இளைஞனாக இருந்து முதிர்ந்த இளைஞனாக ஆகிறான். அவனுக்கும் ஊசலாட்டங்களே இல்லை. சகதேவனின் நிதானமும் அவனுடைய கூர்ந்த அறிவும் என்னை மிகவும் கவர்ந்தன

கிருஷ்ணன்