Sunday, August 14, 2016

இரு உலகங்கள்






ஜெ

இன்றைய அத்தியாயத்தில் ஒரு முக்கியமான பைனரி வந்தது. அதை அப்படிச் சொல்ல முடியுமா என்று தெரியவில்லை. தத்துவத்தை அப்படியே வாழ்க்கையாக எடுத்துக்கொண்டு கொந்தளிப்பவர்களைப்பற்றி தர்மர் சொல்கிறார். அப்படித்தான் ஞானிகள் உருவாகிறார்கள் என்கிறார். அதாவது அவர்களுக்குப்பிரச்சினையே இல்லை. ஆனால் பிரச்சினைகளை தத்துவத்திலிருந்து பெறுகிறார்கள்

மறுபக்கம் , மிகப்பெரிய அவமானதுக்கும் துன்பத்துக்கும் பின்னால்கூட குந்தியும் திரௌபதியும் மிகச்சின்ன விஷயங்களில் மெய்மறந்து ஈடுபடுகிறார்கள். அதை வேறுவகையிலே தீர்த்துக்கொள்கிறார்கள். ஆகவேதான் பெண்களில் தத்துவஞானிகள் குறைவாக இருக்கிறார்களா?

சிவக்குமார்