Saturday, August 27, 2016

கதைகள்






அன்புள்ள ஜெமோ

இன்றையவெண்முரசில் கதைகளைப்பற்றி வரும் இடம் ஒரு ஆச்சரியத்தை அளித்தது. அந்தக்கோணத்தில் யோசித்ததே இல்லை. இப்படி இருக்கவேண்டும் என்ற ஆசையே கதைகளாக இருக்கிறது. அத்தனைபேரும் அந்தக்கதைகளாக ஆகிவிடவேண்டும் என்றும் கதைகளே நிகழவேண்டும் என்றும் ஆசைப்படுகிறார்கள். ஆகவே கதைகளையே மீண்டும் நிகழ்த்துகிறார்கள். ஆகவேதான் கதைகள் நிகழ்கின்றன

நான் இதை என் வகுப்புகளில் கண்டிருக்கிறேன். மாணவர்கள் சொல்லும் எந்த அனுபவத்தையும் நாலைந்து டெம்ப்ளேட்டுகளில் அடக்கிவிடமுடியும். ஏனென்றால் அவர்கள் உண்மை சொன்னாலும்கூட அதை கொஞ்சம் கதையாக ஆக்கிவிடுவார்கள். கதை அவர்களின் மனதுக்குள் இருக்கிறது. எல்லாரிடமும் ஒரு நாலைந்து கதைகள்தான் டெம்ப்ளேட்டுகளாக இருந்துகொண்டிருக்கின்றன

இளைய யாதவன் ஜெயிக்க ஏன் வேண்டிக்கொள்கிறார்கள் என்பதற்கான காரணம் இது. இன்றைய சினிமாவுக்குக்கூட இதுதான் ஸ்கிரிப்ட் இல்லையா? சங்காசுரன் ஜெயித்திருந்தால் படம் ஓடாது. போயட்டிக் ஜஸ்டிஸ் இல்லை என்று ஆகியிருக்கும்

செல்வா குமாரசாமி