Saturday, August 13, 2016

இந்திரனிலிருந்து....





ஜெ

இன்றைய வெண்முரசு வாசித்து கொஞ்சம் வியந்துபோனேன். வெண்முரசு சிந்தனைகளின் மோதலாக உருவம் கொள்வது இப்போதுதான். ஆனால் இங்கிருந்து பார்க்கும்போது எல்லாமே ஆரம்பம் முதலே ஒரே ஒத்திசைவுடன் வந்திருப்பது தெரிகிறது. நான்கூட எதற்காக இவர் பாகவதம் நோக்கி எல்லாம் செல்கிறார் என்று சிந்தித்து சில நண்பர்களிடம் பேசியதும் உண்டு. பாகவதத்திற்குள் சென்றால் மிகவும் கிருஷ்ணத்துதி போலவே ஆகிவிடுமே என்று தோன்றியிருக்கிறது.

 ஆனால் பாகவதத்தில்தான் பசுக்கொலையை வேள்வியில் கிருஷ்ணன் நிறுத்திய சம்பவம் வருகிறது. அதேபோல மந்தரமலையை தூக்கி இந்திரனைத் தடுத்தது. வருணனிடமிருந்து இந்திரனை நோக்கி வேதம் வந்ததுபோல இந்திரனிலிருந்து கிருஷ்ணனைநோக்கி வேதம் வரும் ஒரு தொடர்ச்சியை அந்தக்காட்சி இல்லாவிட்டால் கொண்டுவந்திருக்கமுடியாது. இந்த நாவல் ஒரு பெரிய ஒத்திசைவுடன் உங்கள் உள்ளத்திற்குள் இருந்துகொண்டிருந்தது என நினைக்கிறேன்

சண்முகம்