Sunday, August 14, 2016

அன்னையின் இருமுகங்கள்





ஜெ

திரௌபதி விதுரரை மன்னிக்காமல் நின்றிருக்கும் காட்சியை வாசித்தபோது ஒருகணம் திகைத்தேன். பிறகு நினைக்க நினைக்க அது வளர்ந்துகொண்டே போயிற்று. அவள் எவரையுமெ மன்னிக்கமாட்டாள். ஆனால் அவளை அம்பிகை என்றும் நாவல் காட்டியபடியே வருகிறது. ஆகவே இதெல்லாம் ஒரு பெரிய விஷயமாகவும் அவளுக்கு தோன்றாது. அதாவது தனக்காக அவள் மன்னிப்பாள் பெண்குலத்துக்காக மன்னிக்கவே மாட்டாள் இல்லையா?

ராஜம்