Monday, August 22, 2016

பாதையின் இறுதியில்



அழகிலாத கூனிவடிவம் என்னை ஏன் கூசச்செய்கிறது? ஏனென்றால் நான் இளமைமுதலே அதனிடமிருந்து அஞ்சி விலகி ஓடிவந்துகொண்டிருக்கிறேன். ஒவ்வொரு ஆடையாலும் ஒவ்வொரு அணிப்பொருளாலும் அதை தவிர்த்து முன்செல்கிறேன். ஆனால் நான் செல்லும்பாதையின் இறுதியில் அதுவே எனக்காக காத்திருக்கிறது.

சில்வியா பிளாத்தின் ஒரு கவிதை நினைவுக்கு வருகிறது மேலே வந்த வரியை வாசிக்கும்போது. நிலைக்கண்னாடியில் தன்னைக் காத்திருக்கும் ஒரு அழகற்ற சோர்ந்த முதியவளை அவள் காண்கிறாள். அவளிடமிருந்து தப்ப சில்வியா தற்கொலை செய்துகொண்டாள்

நுண்ணுணர்வுகொண்ட அழகான பெண்களுக்கு இந்த பிம்பம் மிகப்பெரிய அபாயமாகத் தெரிகிரது என நினைக்கிரேன். மைத்ரேயி நேராக அதை நோக்கி போய் ஹல்லோ என்ரு சொல்கிறாள் இல்லையா?

வேணு