Monday, August 15, 2016

இரண்டு தளங்கள்




ஜெ

ஜாபாலரின் கதையில் இரண்டு தளங்கள் உள்ளன. அன்றைக்கு வேதம் கற்க பொதுவாக குலமும் கோத்திரமும் பார்க்கப்பட்டன என்பது ஒன்று. அப்படி இல்லாமலிருக்க வாய்ப்பே இல்லை. அது பிறப்பை அடிப்படையாகக்கொண்ட ஒரு சமூகம். அப்படித்தான் இருக்கமுடியும்

ஆனால் இன்னொரு குறிப்பு ஹர்திருமதர் சொல்வது. அவர் குலம்கோத்திரம் இல்லாத வேடனை மானவராக ஏற்றிக்கொண்டு வேதம் சொல்லிக்கொடுக்கிறார். அது சாந்தோக்ய உபநிஷதத்தின் கதை என நினைக்கிறேன். அதுவும் சொல்லப்பட்டிருக்கிரது

அது ஒரு புரட்சியாக நிகழவில்லை. சாதாரணமாக நிக்ழகிறது. அதாவது அன்று அந்த நெகிழ்வு முறையும் இருந்திருக்கிரது. இன்றைக்குத்தான் இத்தனை சாதியக்கெடுபிடிகள்

சாரங்கன்