Monday, August 15, 2016

அறமீறல்



ஜெ

நான் என் பூர்விக நாட்டை விட்டு வந்து முப்பதாண்டுகள் ஆகின்றன/. என் அப்பா தன் பூர்வீக கிராமத்தைவிட்டு வந்து எழுபதாண்டுக்கலாம் ஆகிறது. இப்படி பூர்விக நிலத்தை விட்டுக்கொண்டே இருக்கிறோம். கோமல் சுவாமிநாதனின் கோமல்தான் என் சொந்த ஊர். இப்போதுதுகூட ஜாதகங்களில் கோமல் என்று உண்டு

அறமீறல் நிகழ்ந்தாலொழிய அந்தணன் வாழ்நிலத்தை கைவிடலாகாது என்று இன்று வந்த வரி துணுக்கிர செய்தது. வாழ்க்கையின் இந்தக்கட்டத்தில் என்ன சாதித்தோம் என்றால் பணம் சம்பாதித்தோம் போலியான ஒரு கௌரவம் கிடைத்தது. பிள்ளைகள் ஆளானார்கள். ஆனால் எதுவும் அர்த்தமில்லை என்ற நினைப்பு ஆரம்பத்திலேயே இருந்தது. இப்போது இன்னும் வளர்ந்துள்லத்

அறமீறலால்தான் இடம்பெயர்ந்தோம் என்று சொல்லலாம்தான். ஆனால் அது உண்மையல்ல என்று நமக்கே தெரியும்.

லக்‌ஷ்மணன்