Thursday, September 22, 2016

யக்‌ஷ சுனை



மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு,

வணக்கம். சில விஷயங்கள்.

1) நமது பேச்சு வழக்கில் "யானை பசி" என்று தான் சொல்வோம். ஐரோப்பிய பழமொழி "As hungry as a Wolf" என்று வருகிறது. காந்தாரர்கள் பீமனுக்கு இந்த பெயரை இட்டிருப்பார்களோ.

2) யக்ஷ சுனை, பாகிஸ்தானில் உள்ள கடஸ்ராஜ் கோவில் குளம் என்று நம்பப்படுகிறது "https://en.wikipedia.org/wiki/Katasraj_temple". ஆனால் தாங்கள் குறிப்பிடும் இடம், காஷ்மீரில் உள்ள பனமிக் [Panamik, Nubra valley, J&K] என்ற இடத்துடன் ஒத்து போகிறது "http://ww.itimes.com/blog/10-hot-water-springs-in-india-that-have-medicinal-properties
".

3) பீமனின் நிறத்தை பற்றியும், "அன்னமே ப்ரம்மம்" என்று சொல்வதையும் பார்க்கும் போது, இவன் "பலாஹாஸ்வ" முனிவரின் மூலம் பிறந்தவனாக இருப்பானோ? (மழைப்பாடல்) 

நன்றி.

இப்படிக்கு,
சா. ராஜாராம்,
கோவை.
அன்புள்ள ராஜாராம்
1. ஓநாயின் பசி அனைவரும் அறிந்ததுதானே? மகாபாரதத்திலேயே வருகிறது அது

2 யக்‌ஷசுனை ஒரு உருவகம் தான். ஆனால் பின்னர் அது உண்மையிலெயேஎ இருந்தது என பல இடங்களில் சொல்லிக்கொள்கிறார்கள்

ஜெ