Friday, January 13, 2017

காட்சிகள்



ஜெ,

வெண்முரசு நாவலின் அழகுகளில் ஒன்று அதன் தீவிரமான கதையோட்டங்களுக்கு நடுவிலே கூட காட்சிரீதியான நுட்பமான சித்தரிப்புகள் வந்துகொண்டே இருப்பதுதான் என நினைக்கிறேன்

வன்பால் நிலத்தில் முதல்மழை என வெம்மைஎழுந்த ஊனில் கொதிக்கும்நெய் சிறுகுமிழியுடன் வற்றிக்கொண்டிருந்தது. சொட்டிய ஊன்நெய் பாளைவரிகளில் தயங்கி வழிந்தது.

என்றவரியை வாசிக்கையில் பொரித்து எடுத்து வைத்த இறைச்சித்துண்டை நேரில் பார்ப்பதுபோல இருந்தது. வெண்முரசு ஒரு கற்பனைக்கதை என்றில்லாமல் கண்முன் நடந்ததாகவே நினைவில் இருப்பதற்கு இதுதான் காரணம் என்று நினைக்கிறேன்

மனோகர்