Friday, January 6, 2017

மூன்றுவேதங்கள்



ஜெ

அர்ஜுனன் தேடிச்செல்லும் பாசுபதம் என்றால் வேதத்தில் எந்த இடம் என அடிமுடி தேடும் உவமை மூலமே சொல்லியிருப்பதை இரண்டாம் வாசிப்பிலேதான் கவனித்தேன்.

பிரம்மன் உருவாக்கியதே வேதம் என்பது பொதுவான சொல். ஆகவே நாம் இன்றுபார்க்கும்நால்வேதங்களும் பிரம்ம வேதங்கள். வேதப்பொருளாகத் திரண்டுவந்தவை அனைத்தும் நாராயணவேதங்கள். விஷ்ணுவே அவற்றின் முதற்பொருள். பிரம்மவேதங்கள் கவிதை. நாராய்ண வேதம் தியானம்.

ஆனால் இரண்டாலும் அறியப்பட்ட, அதேசமயம் முழுசாக அறியப்படாத , வேதம் என்பதே பாசுபதம். அதுவே அனல்வடிவம் கொண்டு மனிதன் முன் எழுந்த சிவம். அதன் அடிதேடியபோது மந்திரமும் முடிதேடியபோது கவிதையும் கிடைத்தது. சிந்திக்கவைக்கும் ஒரு உவமை

மனோகர்