Monday, January 2, 2017

பாசுபதம்






அன்புள்ள  ஜெமோ

வெண்முரசு நாவல்களின் மிகப்பெரிய கவர்ச்சி என்பது தெரிந்த கதையோட்டம் ஆனால் ஒவ்வொரு அத்தியயாமும் எங்கே கொண்டுசெல்கிறதென்று தெரியாமலும் இருக்கும் என்பதுதான். கிராதத்தை கூர்ந்து வாசித்துவருகிறேன். இப்போது வந்துகொண்டிருக்கும் கதை என்னவென்ரே தெரியவில்லை. அர்ஜுனன் பாசுபதம் வாங்குவான் நாவல் முடியும் என நினைத்தேன்

ஆனால் இப்போது புதிய ஒரு கதை தொடங்கிச் சென்றுகொண்டிருக்கிறது. அதில் அந்தப்பெண்ணின் பெயர் பார்வதி என்பது மட்டும்தான் க்ளூவாக இருக்கிறது. இந்த்த்திகைப்பு எப்போதுமிருந்தாலும் ஒட்டுமொத்தமாக நாவல் ஒரு வடிவத்துக்குள் வந்து விடுவதை பலமுறை பார்த்திருக்கிறேன். அலைபாய்வதெல்லாம் ஒரு மையத்தைச் சென்று அடைவதற்காகத்தான் என்பதையும் கண்டிருக்கிறேன். ஆகவே எதிர்பார்க்கிரேன்

செல்வநாயகம்