Saturday, February 18, 2017

ஒற்றைக்கதை





ஜெ

வெண்முரசு நாவல்களில் கிராதம் தனித்துவமானது. இதில் சுத்தமாக தத்துவமே இல்லை. அனேகமாக வெய்யோன் மட்டும்தான் இதற்குச்சமானமானது என நினைக்கிறேன். நீங்கள் வெண்முரசிலே எடுத்துக்கொள்ளும் சவால் என்பது இணைப்புக்கதையைக்கொண்டு ஒரு மொசைக்கை உருவாக்குவதுதான். ஒரிஜினல் மகாபாரதக்கதையில் கதைத்தொடர்ச்சி இல்லை. துளித்துளிக்கதைகளாகவே சென்றுகொண்டிருக்கும். அதை ஒற்றைக்கதையாக ஆக்குகிறீர்கள். இணைத்துக்கொண்டே செல்கிறீர்கள்.

அதற்கு ஒரு மையக்கதையை பயன்படுத்துகிறீர்கள். அந்த டெம்ப்ளேட் அத்தனை மித்திக்கல் கதைகளுக்கும் உரியதுதான். சிந்துபாத் விக்ரமாதித்யன் உலிசஸ் எல்லாரும் அதேபோல ஒரு கதையின் நாயகர்கள்தான். அவர்கள் செய்யும் சாகசப்பயணமே கதை. அதற்குள் வரும் துணைக்கதைகளை ஒன்றுடன் ஒன்று பின்னிக்கொள்கிறீர்கள். அதைத்தான்நான் ஆச்சரியத்துடன் கவனிக்கிறேன். ஊர்வசிக்கதைக்கும் புரூரவஸ் கதைக்கும் மகாபாரதத்தில் தொடர்ச்சி இல்லை. ஆனால் அவற்றை ஒருகதையாக ஆக்கியிருக்கிறீர்கள்

ராமச்சந்திரன்