Friday, February 10, 2017

சாந்திபனி


ஜெ

சமீபத்தில் ஊட்டி நாராயணகுருகுலம் சென்று வந்தேன். எப்படியோ வெண்முரசு நினைவு வந்தது. பிறருக்கு சொல்வளர்காட்டில் உள்ள குருகுலங்கள் எல்லாம் கற்பனையாக இருக்கலாம். எனக்கு அவையெல்லாம் உங்கள் சொந்த அனுபவமாகவே தெரிந்தன. அது ஒரு சாந்திபனி குருகுலம் என்று சொல்லலாம். நித்யாவின் சமாதிக்கும் சென்று வந்தேன். ஆனால் அங்கே எவருமே இல்லை. முழுமையாக காலியாகக்கிடந்தது. அது மிகப்பெரிய சோர்வையும் அளித்தது. ஆனால் அதுதான் இயல்பு என்றும் தோன்றியது. குருகுலம் எவருக்கும் சோறுதுணி என எதையும் அளிப்பதில்லை. ஞானம் எத்தனைபேருக்கு வேண்டும்?

மகேஷ்