Friday, February 17, 2017

ஊர்வசி



ஜெ

வெண்முரசு அடுக்கடுக்காக கதைகளைச் சேர்த்துக்கொண்டே போகும் வடிவம் உடையது. கதைகளுக்கு நடுவே உள்ள உறவென்ன என்பதை ஊகித்து கொண்டு வாசிப்பவர்களுக்கே அது நவாலாக தொடர்ச்சியை அளிக்கிறது.  இப்போது வருவது ஊர்வசி- பூருரவஸ் கதை. 

ஊர்வசி நாராயணரின் தொடையில் பிறந்தாள்,

சந்திரன் குருவின் மனைவியைக் கவர்ந்து அந்த உறவில் பிறந்தான் புதன்.
\
புதன் இருபாலினமான இளையிடம் புரூரவசைப் பெற்றான்

புரூரவஸ் அகிம்சையும் அறமும் கொண்டிருந்தான்.

புரூரவஸ் அறத்தை முன்வைத்து காமத்தை நிராகரித்தான்

புரூரவஸ் ஊர்வசியை காப்பாற்றினான்

ஊர்வசியை புரூரவஸ் மணம்புரிந்துகொண்டான்

இப்படி வரிசையாக கதைகளை அடுக்கிப்பார்த்தால் தொடர்பு தெரிகிறது. கட்டற்ற காமம் வழியாகவே இந்த உறவுகள் நிகழ்கின்றன. புரூரவஸ் மட்டும்தான் கட்டுக்குள் நின்றிருக்கிறான். அவனையும் விதி சிதரடிக்கிறது

மகேஷ்