Monday, February 13, 2017

வான்மணம் .



பீமனின் கையறியும் திரௌபதி ஒரு அரசி. கனவறியும் திரௌபதி ஒரு வனவாசி.  விழித்து அருகில் அவளது இன்மை கண்டு திகைக்கிறான். சத்யவதியும், அம்பிகையும்,அம்பாலிகையும் போன வழியில் திரௌபதியும் போய் விட்டாளா என துணுக்குறுகிறான். 

அவளோ  இந்த ஐவரைக் கடந்த இணையற்ற போதை ஒன்றினில்  திளைத்துக் கிடக்கிறாள். மற்ற போதையில் எல்லாம் புலன்களால் பிரதிபலிக்கப்பட்டே மூளையை தீண்டும். வாசம் வழி போதை மட்டுமே நேரடியாக மூளையை தீண்டும். ஐவறிலும் சிறந்த, அவர்களை கடந்த போதை உபாசகி திரௌபதிதான்.   பால்யத்தில் தந்தையின் அணைப்பிற்குள் அவள் அறிந்தது.  கனவிலும் நனவிலும் அவளை தொடர்வது. சௌந்திக மலர் வாசம் அளிக்கும் போதை. 

மாமலரின் இருப்பை சுட்டும் மெல்லிய வாசம் கசியத்துவங்கி விட்டது. கிளம்பப்போகிறான் பீமன். 

கடலூர் சீனு