Thursday, April 20, 2017

பன்றிமுலை



பெருமதிப்பிற்குரிய ஜெமோ.அவர்களுக்கு,

வணக்கம்.

"கோட்டைக்கதவுகளை நிலத்தின்மேல் இட்டு அவற்றின் மேலமர்ந்த தச்சர்கள் உளியும் கூடமுமாக பணியாற்றிக்கொண்டிருந்தனர். அவற்றின் சட்டகங்களில் இரும்புக் குமிழிகள் பொருத்தப்பட்டுக்கொண்டிருந்தன. பார்க்கவன் திரும்பிப் பார்த்தபின் “அவற்றுக்கு தச்சர்களின் மொழியில் பன்றிமுலைகள் என்று பெயர்” என்றான். யயாதி திரும்பி நோக்கி “ஆம், உண்மைதான். இனி அச்சொல்லால் அன்றி நம்மாலும் அதை நினைவுகூர முடியாது” என்றான்."

"பன்றி முலைகள்" என்பது உண்மையிலேயே தச்சர்களின் மொழியா அல்லது தங்களின் அழகான கற்பனை இடு பெயரா என்பது எனக்குத்தெரியாது.ஆனால் என் மாமா வீட்டிலுள்ள பழங்கால  கதவில் உள்ள வெண்கல குமிழ்களை இதை படித்த பின் மீண்டும் நோக்கியபோது அதன் பெயர் பொருத்தத்தை எண்ணி எண்ணி வியக்காமல் இருக்கமுடியவில்லை!  யயாதி கூறுவது போல் இதை இனி வேறு பெயரால் நினைக்க முடியாது. தங்களின் பார்வைக்கு அதன் புகைப்படங்களை இத்துடன் இணைத்துள்ளேன்.

அன்புடன்,

அ.சேஷகிரி.