Monday, April 24, 2017

ஆண்பெண்






ஜெ
இரண்டு நாவல்களாக ஒரே தத்துவம் வேதவரலாறு என்று சென்ற வெண்முரசு இப்போது ஆண்பெண் உறவின் அடுக்குகளைப்பற்றி ஆணவத்திற்கு அதிலுள்ள பங்கைப்பற்றி விரித்து விரித்து இனி என்ன மிச்சம் என்று சொல்லும் அளவுக்குச் சொல்லிக்கொண்டே செல்கிறது. அற்புதமான பல இடங்களைச் சொல்லலாம். அதிலொன்று சர்மிஷ்டையிடம் யயாதிக்கு உறவு உருவாகும் விதம். மிக யதார்த்தம். ரொமாண்டிக்காக ஏதுமில்லை. அவள் அழகியே இல்லை. அழகியை மணந்தவன் அவளில் எதைப்பார்க்கிறான் என்றும் தெரியவில்லை. ஆனால் படிப்படியாக அந்த உறவு உருவாகிவிடுகிறது. அதற்கு ஒரு காவியத்தன்மையும் வந்துவிடுகிறது

மகேஷ்