Thursday, May 11, 2017

சித்தம்






வெறும்நினைவுகள் என எவையேனும் உண்டா
வெறும் எண்ண ஓட்டமென்பது எவருக்கேனும் நிகழ்வதுண்டா? முகங்களின் குரல்களின் பெருக்கென

சென்றுகொண்டே இருந்தது சித்தம்

இதைக் கொண்டா கருத்துக்களை உருவாக்கிக் கொள்கிறார்கள்? இதனூடாகவா உறுதியான முடிவுகளை சென்றடைகிறார்கள்?

இந்த வரிகள்தான் பீமனை தனித்துக்காட்டுகின்றன என நினைக்கிறேன். மற்றவர்கள் தங்கள் மனம் பற்றி நம்பிக்கைகொண்டிருக்கிறார்கள். தங்கள் சிந்தனையை நம்பிமுடிவெடுக்கிறார்கள். இவன் இயல்பாக இருக்கிறான். பீமனிடம் நான் கண்ட முக்கியமான பண்பு என்றால் தேவையில்லாத விஷயங்களை கானாமல் ஓடிவிடுவதுதான். அவனுக்கு தத்துவஞானம் கிடையாது. ஆகவே எந்தப்பாவலாக்களும் இல்லை. அன்பாக இருக்கிறான். ஏனென்றால் அன்பை மறுக்கும் விசயங்களைத்தெரிந்துகொள்வதே இல்லை. ஆகவேதான் மாமலர் அவனுக்கு வசப்படுகிறது

ருசிதான் பீமன். நா ருசி மூக்கு ருசி. அவர்களுக்குத்தான் மாமலர். சும்மா ஞானம் ஞானம் என அகந்தையைச் சுற்றிக்கொண்டிருக்கக்கூடியவர்களுக்கு அல்ல.

சுவாமி