Monday, May 8, 2017

மறுபக்கம்





ஜெ
வெண்முரசின் மாமலர் ஒரு தனித்துவமான நாவல். கதாநாயகனுக்கு தத்துவ ஆர்வம் இல்லை. ஞானம் நிறைந்த எதையும் அவன் சொல்லவில்லை. எதையுமே அவன் ஆராயவில்லை. அவனுக்குள் மனம் சொற்களாக ஓடிக்கொண்டே இருக்கவில்லை. அவன் சும்மா கதையை கேட்டுக்கொள்கிறான். கெள்விகளை அடைகிறான். ஆனால் அவன் அதையெல்லாம் கேட்டுத்தெரிந்துகொள்ளவில்லை

அதைவிட அவன் உண்மையின் மறுபக்கத்தைச் சந்திக்கவே இல்லை. கண்ணைமூடிக்கொண்டு ஓடிவிடுகிறான். அதை அர்ஜுனன் தருமன் ரெண்டுபேருமே செய்வதில்லை. அவர்கள் நேருக்குநேராகச் சந்திக்கிறார்கள். ஆகவேதான் அவர்கள் இன்னொரு இடம் போகிறார்கள். பீமன் எதுவும் ஆவதில்லை. அவன் காதலை கண்டடைவதுகூட அதன் இருண்ட பக்கத்தை காண மறுப்பதனால்தான். அவனுக்குத்தான் காதல் என்பது அழகான உண்மை

சுவாமி