Monday, June 26, 2017

அவதார கணக்கில் இரமன் ஏன் இல்லை?



ஜெ வணக்கம்

பிரயாகை முழுதுமாக இப்பொழுது படித்து முடித்தேன், புத்தக வடிவில். கணிணியில் படிப்பதை விட, புத்தக வடிவில் படிப்பது முழுமையாக உள்ளிழுத்துக்  கொள்கிறது. விரிவான கட்டுரை பிறகு எழுத வேண்டும்.

இப்பொழுது வண்ணக் கடல் ஆரம்பித்திருக்கிறேன்.  வடக்கிலிருந்து வந்த பாணர்கள், பெருமானை வணங்கி பாடும் பொழுது, ஐந்து அவதாரங்கள் என்று பாடுகின்றனர். கிருஷ்ணன் மகாபாரத காலத்து மனிதன்.அன்று அவதாரமாகாதவன்.   ஆனால், இராமனோ  மகாபாரத காலத்திற்கு தோராயாமாக பல நூறு ஆண்டுகள் முன் பிறந்தவன்.

அவதார கணக்கில் இரமன் ஏன் இல்லை?

நன்றி

சதீஷ் கணேசன்

அன்புள்ள சதீஷ்

இதை ஒரு பெரிய தர்க்கமாகச் சொல்ல முடியாதென நினைக்கிறேன். ஆனால் மகாபாரதக் காலத்தில் ராமன் கடவுள் அவதாரமாக இல்லை என இந்நாவலுக்குள் சொல்கிறேன். ராகவராமன், ஷத்ரிய அரசன் என்றே அவன் கருதப்படுகிறான். பரசுராமனும் அவ்வாறே. அவர் ஒரு குருமரபாகக் கருதப்படுகிறார்

மற்ற ஐந்து அவதாரங்களுக்கும் பரசுராம பலராம ராம கிருஷ்ண அவதாரங்களுக்கும் இடையே உள்ள வேறுபாட்டைப் பார்த்தால் இது தெரியும். இந்நான்கு அவதாரங்களும் மானுடர்கள். வரலாற்றுநாயகர்கள் முதல் ஐந்தும் தொன்மக்கதை உருவகங்கள்.

ஜெ