Tuesday, June 6, 2017

பெண்மை

 
 
திரு.ஜெ அவர்களுக்கு,

வெண்முரசு வாசகியாகிய எனக்கு கண்கூடாகத்தெரியும் உண்மை இது -மகாபாரதத்தைக் கொண்டு நடத்துவர்கள் பெண் கதாபாத்திரங்களே. மணிகள் கோர்க்கப்பட்ட நூல் போல, தேவயானி,சத்யவதி,குந்தி, பின்னர் திரெளபதி ஆகியோரே மகாபாரத்தை வழிநடத்துகின்றனர். பெண்கள் குலவதுக்களாக, அரசியல் பகடைக்காய்களாக மட்டுமே ஏற்கப்பட்ட அந்நாட்களில் இவர்கள் ஆண்களை ஆட்டுவித்து, சரித்திர   நாயகிகளாகப் பரிமணித்துள்ளனர். 

இவர்களது ஆளுமைக்குக் காரணம் பெண்மையின் பாலின சக்தியா,தாய்மை என்னும் பதவியா, அவர்தம் அரசியல் பின்புலங்களா, அல்லது தனிப்பட்ட ஆசாபாசங்களா...

முக்கியமாக, பாஞ்சாலி 5 துணைவர்களை சமாளிப்பது....அம்மாடியோவ்!!!

 என் பிரமிப்பு தொடர்கிறது....

Maithreyi Nath.