Friday, June 23, 2017

சமயற்கலை






அன்புள்ள ஜெயமோகன் அண்ணா,

சிறுமி ஒருத்தின் பின் அமர்ந்து அவளது குழலினை வாரி ஒரு கற்றையை ஒரு கரத்தால் அவள் அன்னை பற்றி இருக்க, "அம்மா என்னதான் செய்கிறாய்?" என்பது போல "நளன் தமயந்தி கதை அப்படியே நின்றதே" என எண்ண, கதை அழகாக பின்னப்பட்டுப் செல்கிறதுநளனின் தேசத்திற்கு பாண்டவர்கள் வருகிறார்கள்தொலைவில் காணும் கண்களுக்கு பெண் போலவும் அருகே நெருங்க ஆண் எனவும் தோன்றும் - அன்னத்தை ஒத்த நளனின் பெண்மை அம்சம் அர்ஜுனனிடம் இருக்கிறது. அவனது புரவி பயிற்றும் கலை சகதேவனிடம் இருக்கிறது. சமயற்கலை பீமனிடம் இருக்கிறது

நீர்க்கோலத்தின் ஒருங்கிணைப்பு பிரமிக்க வைக்கிறதுபாறை ஒன்றை கண்டபோதே அதில் உறையும் சிற்பத்தைக் கண்டு அதன் தேவையற்ற பகுதிகளை மட்டும் நீக்கி உயிரிட்டோட்டமுள்ள சிற்பம் சமைக்கும் தேர்ந்த சிற்பி போல, கதையை  மொத்தமாகவே முதலிலேயே கொண்டு பின்னர் வடிவம் தருகிறீர்கள்சொற்கள் இவ்வளவு திறமுடன் கையாளப்பட முடியுமா என்ன?.  சகதேவன் புரவிகளைக் கையாளும் திறம் சொல்லும் போது இரண்டாவது கியரை எட்டி, பிருகந்நளையின் நடனம் மூன்றாவது கியர், பீமனின் அடுமனைக் கலை டாப் கியரில் பறக்கிறதுபிருகந்நளையின் நடனம் - ஒரு நல்ல நடனத்தினை கண்டு உண்டாகும் விளைவை சொற்கள் கொண்டு நிகழ்த்திக் கொள்ள செய்யமுடியுமா என வியந்திருக்க, பீமன் அதற்கும் மேல் செல்வது போல் தோன்றுகிறதுபீமன் உண்பதிலும் கலைஞன், சமைப்பதிலும் கலைஞன்

கண்ணீரைத் தருவித்த கெத்தேல் சாகிப் இன்று பீமனில் முழுமை அடைகிறார்ஆஜானுபாகுவான, ஒரு எளிய பெண்ணின் பால் இழைக்கப்படும் கொடுமைக்கு ஒரே அடியில் மரணத்தின் பாதையில் செலுத்தும், பொருள் வரவைப் பொருட்டென கொள்ளாத, பெரும் கருணை கொண்ட, சமையற்கலையின் உச்ச திறம் கொண்ட அந்த ஜின் ஒரு யோகி என்று எண்ணச் செய்கிறான் இந்த பீமன் என்னும் தேவன்பீமன் மாபெரும் மல்லன் என்பது இரண்டாம் பட்சம் தான் - தோள்வலியில் அவன் கொண்ட பெருமிதம் இக்கலையில் அவன் கொள்ளும் நிறைவுக்கு ஈடாகாதுசில நாட்களாக லேப் டேப்பின் முன்னால் தங்கள் அமர்ந்திருக்கும் காட்சி எல்லா செயல்களின் இடையேயும் மனதில் இருந்து கொண்டிருக்கிறதுஎன் அன்பையும் நன்றியையும் உங்களுக்குத் தெரிவிக்க விழைகிறேன்.

அன்புடன்,
விக்ரம்,
கோவை