Thursday, June 22, 2017

நீர்க்கோலம் – கலியை வென்றவள்




பாண்டவர்கள் தனித்தனியாகப் பிரிந்து விதர்ப்பம் வழியாக நிஷத புரியை அடையச் செல்லும் வழியில், குண்டினபுரியில் பன்னிரு அன்னையரின் ஆலயத்தில் பீமனும், திரௌபதியும் தரிசனம் செய்கிறார்கள்.  பிற அன்னையர் ஆலயங்களில் இருந்து சற்றே வேறுபடும் ஆலய வகை இது. முழுக்க முழுக்க விதர்ப்பத்தின் மூதன்னையர் மட்டுமே வணங்கப்படும் ஆலயம். இதன் பன்னிரெண்டாவது மூதன்னையாக தமயந்தி வணங்கப்படுகிறாள். முதல்லன்னையாக வருபவள் லோபாமுத்திரை. அவளும் விதர்ப்பினியாக இருந்து, அகத்தியருடன் காட்டில் வாழ்ந்தவள். தமயந்தியின் காலின் கீழ் கலி இருக்கிறான். பீமன் அவள் கலியை வென்று விட்டதாகச் சொல்கிறான். இங்கே திரௌபதியும் துரியனை வெல்லத்தானே போகிறாள். நள தமயந்தி கதைக்கும் பாண்டவர்களுக்குமான பொருத்தங்கள் மிகுந்து கொண்டே வருகின்றன.

அன்புடன, 
அருணாச்சலம் மகராஜன்.