Wednesday, August 2, 2017

புதுவை ஜூலை கூடுகை பதிவு 2017





கடந்த கூடுகையில் முனவைத்த அதே கேள்வி இங்கு மீளவும்  எழுகிறமனிதகுலம் தன்னை கண்டடைவதற்கான வழியாக அடிப்படையான அறக்கேள்விகள் அனைத்தையும் கேட்டுக்கொண்டு ,அழியாத ஞானத்தை அவற்றுக்கானவிடைகளாக அடையமுயல்கிறதுஇன்றைய நடைமுறை வாழ்வின் ஒரு தருணம்துல்லியமா அங்கும் ஒருகதைமாந்தரில் வெளிப்படுகிறதுஅதன் மீது எத்தனை அதிமானுஷத்தை ஏற்றினாலும்.அது இங்கும் ஒருவனில்பிரதிபலிப்பதை பார்க்கமுடிகிறது என்பதே அதன் சிறப்புகளில் தலையானது .  


ராமயணம்,மகாபாரதம் இரண்டும் இதிகாசங்கள் என மரபார்ந்த தளங்களில் பேசப்பட்டாலும் , பௌராணிகர்களை நோக்கி தாட்சண்யமற்ற கேள்விகளை சமூகம் கேட்டபடியே இருக்கிறது , காலத்திற்கேற்ப ,  ராசிக்கியத்தை ஒட்டி , அது புனையப்படைவது நடந்தபடியே இருக்கிறது .வால்மீகி எழுதிய பிறகு அதற்குவிரிவாக்கம் கம்பராமாயணம் என் சொல்லமுடியாது . காலமாற்றத்திற்கு உட்பட்டு , சில விஷயங்களில் அதுமூலத்தோடு மாறுபடுகிறது அவ்வளவேஅது கால ஓட்டத்தை மனதில் கொண்டே அவை மாறுபாட்டைகின்றனபுனைவின் சுதந்திரமாக அதை பார்க்கவேண்டி உள்ளது . 


சிறிய கதைமாந்தர்களுக்கு மட்டுமின்றி முக்கிய கதாபாத்திரங்களுக்கும் அதே முறைமை காட்டப்படுகிறதுவியாசபாரதத்ததில் வாழாத விசித்திரவீர்யன் வெண்முரசில் நிறைவாக வாழ்கிறான்மணிச்சங்கம் . சங்கம் ஞானத்தின்குறீடென அறியப்படுகிறது . அது வெண்முரசில் அணிசெய்யப்பட்டு மணிச்சங்கமாகிறது.விரிவாக்கம் என்பது ஒருபுறம் நடந்தாலும் ஜெயமோகன் கற்பனையில் உருவாக்கிய பாத்திரங்கள் அற்புதமாக உருபெற்று கதைதருணங்களில் ஒளிர்கின்றனமாபெரும் ஆளுமைகளைத் தவிர்த்து அணுக்க சேடிகளின்அமைச்சர்களின்சூதர்களின் பார்வையில் மட்டும் இக்கதையை அனுக வாய்ப்பிருக்கிறதுஅவர்கள் பாரதத்தின் பெரும்ஆளுமைகளின் நிழல் பிம்பங்களாகஆடிகளாகவிமர்சகர்களாக வருகிறார்கள்கதை ஒழுக்கிற்கு குந்தகம்விளைவிக்காது தனியாக கதைபோக்கிற்கு அடர்த்தி ஏற்படுத்துகிறார்கள் , ஆனால் ஜெயமோகன் அவற்றைதுணிவுடன் மையக்கதை மாந்தருடன் இணைத்து உலவவிடுவது . ஒரு கோணத்தில் கேள்விகளாக எழுந்தபடிஇருப்பதை தவிறயிலாது.


மக்கள் மனத்தில் வாழும் பாரதம் போன்ற ஒன்றை மறுவாக்கம் செய்யும் போது “ஜெ” சொன்னதுபோலஇடைவெளிகள் , துணைபாத்திரங்கள் போன்றவற்றுடன் அனாயாசமாக தன் கட்டற்ற மொழியில் திறக்கும்போதுஅவை ஒவ்வொன்றும் ஒரு விதையைப்போல பல பரிமாணங்களை பொதிந்தபடி செல்கிறதுமரபார்ந்தவர்கள்அதை வாசிக்க நேரும்போது ஏற்படும் திடுக்கிடல் தவிற்க இயலாதுஆனால் ஒரு எழுத்தாளர் தான்நினைப்பதெல்லாம் அதில் ஏறிட்டுவிட முடியுமா , என்றால் பாரதம் போன்ற ஒன்றில் முடியாது என்றேநினைக்கிறேன்ஒரு இடத்தில் தன் கருத்தை வைத்தால் அதை சுமந்து செல்லும் கதாபாத்திரத்தை மற்றொருமுனையிலே சமன்படுத்தவில்லை எனில் அது தனித்து நின்று புனைவிற்கு சுவைசேர்க்காது

அப்படி ஒரு பிசிறைஇதுவரை அறியவில்லைமிக நேர்தியாக சொல்லில்நிகழ்வில்தற்காலத்துடன் துணிச்சலாக பயணிக்கமுடிகிறது என்பது பிரமிப்பாக இருக்கிறது.மற்றொருபுறம் அதை சமப்படுத்தல் என்பது போல ஒரு சவால்பிறிதொன்றில்லை .என் ஆவல் முழுக்க அவற்றின் உருவாக்கம் எழுச்சி கதைகூற்றின் பங்கு ஆகியவற்றை ஆழ்ந்துநோக்குவதில் கிடைக்கும் பரவசம் அநிர்வசனீயமானது .


அகஸ்தியர் சொல்வது போல “ஒரு வலையின் கண்ணியை வலையைப்பார்க்காமல் சரிசெய்யமுடியுமா?” என்றார்அகத்தியர். “ஆம்மனிதர்கள் பிறவியின் வலையிலும்குலத்தின் வலையிலும்செயலின் வலையிலும்அமைந்திருக்கிறார்கள் என்பார்கள் நூலறிந்தோர்” என்று சொன்ன ஸ்தானகரிடம் அகத்தியர் சுட்டுவிரலைக்காட்டி “கோடிவலைகள்கோடானுகோடி வலைகள்ஒவ்வொன்றிலும் கோடானுகோடி கண்ணிகள்முடிவிலியையே அதில் ஒரு கண்ணி என்று சொல்லலாம்” என்கிறார்.


அகத்தியர் “அந்த வலைகளை அறிய எவராலும் முடியாதுஆனால் ஒரு வழி உள்ளதுஅதை கணஞானம்என்கிறோம்இங்கே இப்போது இக்கணத்தில் மட்டும் அந்த வலையைப்பார்க்கிறோம்இந்த அறையில்இந்தகணத்தில் நிகழ்வதன் ஒரு பகுதிதான் நீங்களும் நானும் இவரும்” என்றார்கணாதரரின் விவாதம் போல போகிறபோக்கில் எடுத்தாளப்படுகிறது.




நாவலில் இடம்பெற்றுள்ள உபகதைகள் அதன் சொல்குறியீட்டு மற்றும் உளவியல் முறையிலும் அவைசொல்லப்படும் தருணத்துடன் இருக்கும் நுட்பமான பிணைப்பாலும் பலத்திறப்புகளை உள்ளடக்கியதாகின்றன.
இயற்கையாகவே அடர்தியான கருத்துக்களை கொண்ட வியாசரின் கதை சொல்லும் முறை இன்றைய நவீனபேரிலக்கிய  போக்குடன் அது புனைந்து தரும்போது ஆலமரமென கணக்கில்லா விதைகளை விதைத்தபடிசெல்கிறது .முதற்கனல்’ என்பது முதல் பொறிஒரு பெண்ணின் சாபமே குருகுலத்தை அழிக்கும் “முதற்கனல்” என்றாகிறது . இதில் வேடிக்கை இந்த சொல்லை எந்த முக்கிய தருணத்துடன் பொருத்தி இதை கருத்தை அங்கும்கண்டடைய முடிகிறது


அது அம்பையுடையது அல்லஅதற்கும் முன்னால் கைகூப்பி அறுபது வயதில் பிள்ளைகள் பெற்று இறந்தசுனந்தையின் கனல் , என்பது விசித்திர வீரயனின் கூற்றில் வெளிப்படுகிறது இது பலஆண்டுகளாக நிகழும் ஒருஅலரின் சிறு துகள்களை எல்லா இடங்களிலும் காட்டப்படுகிறது . 
பிரமாண்டங்களுடன் இணையாது ஆதூரசாலையில் தனித்து வாழும் ஒரு பிறவி நோயாளிஇருத்தலியலின்நுட்பத்தை , நுண்மையில் அறிந்து கொள்கிறான்தனக்கான ஆப்தவாக்கியத்துடன்.


இளங்காற்றில் மகரந்தபீடம் குலையும் மலர்கள்காற்றில் சிறகுகள் பிசிறிய பறவைகள்அவ்வளவுவண்ணங்களையும் ஒருபறவையின் சிறகிலேயே ஒவ்வொரு வேளையிலும் அவை மாறுபட்டுக் கொண்டிருப்பதில்,இவ்வுலகம் வண்ணங்களின் பெருக்குஒலியின் பெருக்குமணங்களின் பெருக்குசுவைகளின் பெருக்காகஉணர்கிறான்புனுகை அள்ளும் குறுதோண்டியால் கடலை அள்ளுவது போன்றது இப்பிரபஞ்சத்தை புலன்களால்அறிய முயல்வதுஒருநாளில் ஒருநாழிகையில் நம்மைச்சுற்றி வந்து நிறையும் உலகை அள்ள நமக்கு கோடிபுலன்கள் தேவை எனகிறான்.


அனைத்தையும் துறப்பதில் கிடைக்கும் பிறவிப்பயனை அணைத்தையும் அடைவதில் பஞ்சேந்திரியங்களின் வழியேபுலனகளால் அடைகிறான் . 




இரு விளிம்பு நிலை பெண்களுடனான அவனது உரையாடல் அவன் அடைந்துள்ள ஞானத்தின் வெளிச்சமாககாட்டப்படுகிறதுவிசித்திரவீரியன் விழிகளை அவளைநோக்கித் திருப்பி “நான் ஆணென்று உணராத ஒருகணமும் இல்லை அன்னையே” என்றான். “சொல்லப்போனால் இவ்வுலகின் ஒரே ஆண் என்றும்உணர்ந்திருக்கிறேன்.”விசித்திரவீர்யனின் அவள் மீது உள்ள அன்பினால் மேலும் சில காலம் வாழவிரும்பும்விழைவை தன் தாயிடம் வெளிபடுத்துகையில் சத்தியவதி அவன் ஒரு கொடிவழி தொடர்ச்சி இடை மட்டுமேஅதைதாண்டி அவன் ஒன்றுமில்லை என்பதை , அவன் ஆணா என்கிற சீண்டலை மிக அற்புதமாக ஏற்று தான்மட்டுமே ஆண் என்கிறான்


கசப்பானதாக இருப்பினும் உண்மை ஒரு நிறைவையே அளிக்கிறது என்றான்சத்யவதி அவனை நிலைத்தவிழிகளுடன் நோக்கி “விசித்திரவீரியாவாழைப்பூ இதழ்களைக் களைந்து உதிர்த்துவிட்டு கனிமட்டுமாவதுபோலமனிதர்கள் அவர்கள் மட்டுமாக ஆகும் ஒரு வயது உண்டுநான் அதில் இருக்கிறேன்இன்று நான் என் விதியைமுழுமையாகவே பார்த்துவிட்டேன்எங்கோ ஒரு மீனவர்குடிலில் பிறந்தேன்நதிமீது பித்தியாக அலைந்தேன்பேரரசியாக இந்த அரியணையில் இன்று அமர்ந்திருக்கிறேன்இத்தனை வேடங்கள் வழியாக விதியொழுக்குஎன்னை கொண்டுசெல்லும் திசை என்ன என்று இன்று அறிந்தேன்என் அத்தனை முகங்களையும் இன்றுகளைந்துவிட்டேன்நான் இன்று சந்தனுவின் மனைவி மட்டுமேஎன் கடமை மேலுலகம்சென்றுஅவரைப்பார்க்கையில் அவரிடமிருந்து நான் பெற்றவற்றை சிதையாமல் கையளித்துவிட்டேன் என்றஒற்றைச்சொல்லை நான் சொல்லவேண்டும் என்பது மட்டுமேவேறெதுவும் எனக்கு இன்று முதன்மையானதுஅல்ல” என்கிறாள்




இனி தன் உடலை  வழிபட முடியாதுபொய்த்தெய்வங்களை வழிபடுபவன் நரகத்துக்குச் செல்கிறான் என்றுஅறிந்திருக்கிறேன் என்கிறான் . புகழும்செல்வமும்உடலும்தான் மூன்று பொய்த்தெய்வங்கள் என்பார்” மணிச்சங்கம் , பல பொருள் பொதிந்ததாக இரும்பினும்சங்கம் ஞானத்தின் வெளிப்பாடு , அது அழகுறசொல்லப்பட்டதால் மணிச்சங்கமாகிறதுபூரண வாழ்கையை இருத்தலியலின் மூலம் வாழ்ந்து முடிப்பதில் , இன்றைய நடைமுறை வாழ்வியலின் மிக அணுக்கமாக உணரவைக்கிறது.




முதுமையில் கருவுற்று குருதியையும் கண்ணீரையும் முழுக்க மகவுகளுக்கு அளித்துவிட்டு இறந்த சுனந்தையின் பழிஅன்றே இந்நகர் மேல் விழுந்துவிட்டது என்கிறான். என் உடலின் அநாகதத் தாமரையில் அனலில்லை என்றுசித்தர் சொன்னார்அங்கே சுனந்தையின் குளிர்ந்த கண்ணீர் தேங்கிக்கிடக்கிறது என்று எண்ணிக்கொண்டேன்.” என்கிறான் விசித்திர வீரயன்.


அதே சமயம் விசித்திரவீரியன் கண்கள் ஒளிர “அவள் மூன்று வியாழவட்டக்காலம் கன்னிமாடத்தில்சிறையிருந்தாள்அப்போது எத்தனை கனவுகள் கண்டிருப்பாள்எத்தனை ஆண் உடல்கள் என்கிற மற்றொருகோணத்தை சொல்லி சிரிக்கிறான் 


சங்குகரணன் சொல்லும் அந்த குழந்தை கதை குறியிட்டுரீதியானது , தங்கள் நாகர் தொல்கதை என்னும் கடலின்மற்ற உலக்கதைகள் ஆறுகள் என சங்கமிக்கும் என்று தொல்மரபாக பிரமிக்க வைக்கிறான்.
அம்பிகை திரும்பிப்பார்த்தாள்அம்பாலிகை கையில் அந்த வெண்மலர் இருந்தது , பாண்டுவையும் அடுத்ததலைமுறையின் முதற் கிழங்காகவும் வெளிக்காட்டும் குறியீடாகிறது.


மணிச்சங்கத்தில் சங்குகர்ணன்..வானமென கறுத்துவிரிந்த என் அன்னை கத்ரு நான் விரிந்து வந்த முட்டையைபிரியமுள்ள கண்களுடன் குனிந்து நோக்கி என்னை அவ்வாறு அழைத்தாள்காலங்கள் என் மீது காற்றெனஒழுகிச்செல்கின்றனஅரசே கேள்நான் அழியாதவன்என்னை குருகுலத்து இளவரசன் அர்ஜுனன் என்பவன்காண்டவ வனத்தில் எரிப்பான்அவன் பெரும்பேரன் ஜனமேஜயன் என்பவன் என்னை சர்ப்பசத்ர வேள்வியில்எரிப்பான்நான் அழிவின்மையின் இருளில் இருந்து தோல்சட்டையைக் கழற்றிவிட்டு புதியதாகப்பிறந்தெழுவேன்…”தட்சகனின் விதி எக்காலத்தும் தன் இனத்தின் வித்து இங்கு விழலாகாது என்பதில் அவனும்கவனமாய் இருக்கிறான்அதை சங்குகர்ணனின் விசித்திரவிரயனை கடந்து பார்க்கும் குறியீட்டில் வெளிப்படுகிறது.

கிருபாநிதி அரிகிருஷ்ணன்