Thursday, November 2, 2017

இளமைவடிவம்.



ஜெ
பிரலம்பனிடம் கண்ணன் சொல்லும் வரிகளை வாசித்ததும் ஒரு புன்னகை. அவன் அன்னையின்பெயர் நிவேதையா என்று கேட்கிறான். அது ராதையின் பெயரின் இன்னொரு வடிவம். ஆம் என்று அவன் சொல்கிறான். அந்த இயல்புதான் அபிமன்யூவிடமிருந்தது. அபிமன்யூவிடம் அது குறும்பாகவும் துள்ளலாகவும் வெளிப்பட்டது. அதே இளமையை கொஞ்சம் மென்மையாக கண்ணன் வெளிப்படுத்துகிறான். மாறா இளமை என பிரலம்பன் உணர்வது இதைத்தான் என நினைக்கிறேன். மருகன் தான் மாதுலரின் சரியான இளமைவடிவம். கண்ணைன் மைந்தர்களாக வரும் எவர்மிடமும் அந்த துள்ளலைக் காணமுடியவில்லை

சாரங்கன்