Thursday, November 2, 2017

கவிதை



ஜெ
வெண்முரசு முழுக்க ஒரு பொது அம்சம் வந்துகொண்டே இருக்கிறது. அத்தனை நிபுணர்களும் தங்கள் தொழிலைப்பற்றி ஒரு தத்துவார்த்தமான விளக்கத்தை ச்சொல்கிறார்கள். துரோணர் வில்லைப்பற்றிச் சொல்கிறார். சமையலறை சூதர் சமையல் பற்றிச் சொல்கிறார். ஒப்பனைக்கலைஞர்கள் அதைப்பற்றிச் சொல்கிறார்கள். அனைத்துமே வேதாந்தமாகவும் உள்ளன. இவற்றை உவமைகளாக ஆக்கி நீங்களே கிருஷ்ணனின் சொல்லின் சாரத்தைச் சொல்லிச்செல்கிறீர்கள் என நினைக்கிறேன். வாசிக்கையில் அவற்றின் அபாரமான கவித்துவம்தான் மனதில் நிற்கிறது. பின்னர்தான் அவற்றை விரிவாக்கிக் கொள்ளமுடிகிறது

இன்றைய அத்தியாயத்தில் படகுவிடுதலைப்பற்றிச் சொல்லப்படும் இடங்கள் நெரடியாகவே கவிதையாக அமைந்திருந்தன. கால்களை நீருக்கும் கைகளை காற்றுக்கும் கொடுப்பது. கைகள் ஏதோ பறவையின் சிறகுகள் என்னும் வரி போன்றவை மீண்டு மீண்டும் மனதில் விரிந்துகொண்டே இருந்தன


சண்முகம்