Saturday, December 23, 2017

என் வாழ்க்கையின் கணம்



ஜெ

தேவிகை பூரிசிரவஸ் இருவரும் சந்திக்கும் இடத்தைக்கூர்ந்து வாசித்தேன். ஏனென்றால் இது என் வாழ்க்கையின் கணம். இதை நான் பலமுறை கண்டிருக்கிறேன். ஒரு திருமணத்திலே அவளை மீண்டும் சந்தித்தேன். எந்த தயக்கமும் இல்லாமல் சிரித்தபடி பேசினாள். சாகசமாகப் பேசி கொஞ்சம் சரசமாடவும் செய்தாள். துக்கமே இல்லையா இவளுக்கு என்று நான் தான் மாய்ந்து மாய்ந்துபோனேன். அப்படி ஒரு composure ஒரு வகையான நிமிர்வு. என்னால் கண்ணைப்பார்த்துப் பேசமுடியவில்லை. குழந்தையைக்கொண்டுவந்து காட்டி என் முன்னாலேயே கொஞ்சினள். கணவனைப்பற்றி பெருமையாகப்பேசினாள். நான் அழுதுவிட்டேன். அப்படியே திரும்பி வந்தேன். இப்போது வெண்முரசு வாசிக்கும்போது அவளைப்புரிந்துகொள்ளமுடியும் என தோன்றுகிறது


எம்.