Saturday, December 23, 2017

வேட்கை



ஜெ,

தேவிகை பூரிசிரவஸைச் சந்திக்கும் இடங்களில் உள்ள மனநாடகத்தை பலமுறை வாசித்தேன். நீரில் அவள் தன் முகத்தைப் பார்த்துக்கொள்வது. அவன் இளமையாக இருக்கிறான் என நினைப்பது. அவன் தோள்கள் மீது அவள் கொண்டிருக்கும் கவனம். அவள் அவனை பார்க்கவேண்டும் என விரும்புகிறாள். ஆனால் சந்திக்கும்போது தன் வேட்கையைத்தெரிவித்துவிடுவோமா என அஞ்சுகிறாள். அங்குமிங்குமாக அவள் உள்ளம் அலைமோதுகிறது.

 ஆனால் எத்தனை நின்றாலும் எது நிகழுமோ அதுவே நிகழும். வேட்கையே ஜெயிக்கும். அதிலும் அவள் அவனைச்சந்திக்கும்போது முதலில் கேட்கும் கேள்வி திருமணமாகியதா என்றுதான். அதை முன்னரேஅவள் அறிவாள். முன்பு அவனை அவள் சந்திக்கும்போதும் இதைப்போலவேகேட்டு அவனை இன்சல்ட் செய்தாள். அந்த விளையாட்டு அழகானது. அதற்குள் உள்ள வலியும் நுட்பமானதுதான்


மனோகர்