Wednesday, January 10, 2018

கிருஷ்ணனின் வருகை



அன்புள்ள ஜெ


ஒவ்வொருவரும் ஒவ்வொரு உச்சநிலையில் பிடிவாதமாக இருக்கிறார்கள். எல்லாருக்கும் சமமான நியாயங்கள் உள்ளன. அதை மட்டுமே அனைவரும் பார்க்கிறார்கள். ஆகவே இனி போர் தவிர வேறுவழியே இல்லை என்ற நிலையை உண்டுபண்ணிவிட்டு அங்கே கிருஷ்ணனை கொண்டுவருகிறீர்கள். கிருஷ்ணனின் வருகைகள் எல்லாமே ஹீரோ எண்டிரிகள்தான். இவர் இனிமேல் என்ன செய்யமுடியும் என்ற எண்ணம்தான் ஏற்படுகிறது. ஏதாவது அற்புதம் நடக்கும் என்று தோன்றியது. ஆனால் ஒன்றுமே நடக்காது என்றும் தெரிகிறது. அற்புதம் நடக்கவில்லை என்றால் இவர் ஏன் செல்லவேண்டும் என்றும் அப்படி கிருஷ்ணனை வெறும் மனிதனாக தோற்றுப்போவதைக்காட்டிவிடவேண்டுமே என்றும் பயம் வருகிறது. தெரிந்த கதையை இப்படி நாள்தோறும் நள்ளிரவிலே காத்திருந்து வாசிப்பதென்பது ஒரு ஆச்சரியம்தான்



ஆர்.சிவக்குமார்