Saturday, January 13, 2018

தாரையின் கதாபாத்திரம்



ஜெ,

தாரையின் கதாபாத்திரம் அழகாக உள்ளது. இதுவரை வந்த பெண்கதாபாத்திரங்களின் குணவேறுபாடுகள் ஆச்சரியமூட்டும் அளவுக்கு வேறுபட்டிருக்கின்றன. தேவிகை நிதானமானவள். ஆனால் விஜயை கொஞ்சம் அறிவும் நிதானமும் குறைவானவள். விஜயை எதிர்மறை மனநிலையில் அதிருப்தியும் மனச்சோர்வுடனும் இருக்கிறாள். தேவிகை அப்படி அல்ல. நம்பிக்கையும் நிதானமும் கொண்டிருக்கிறாள்.

அதேபோல அசலை துணிச்சலானவள். அதேசமயம் அவள் படித்தவள். அரசியருக்குரிய குணங்கள் கொண்டவள். அரசவையை அறிந்தவள். ஆனால் தாரை சின்னப்பெண் போல உற்சாகமான கள்லமற்ற பெண். அவளுடைய குணச்சித்திரமே அற்பிதமாக உள்ளது. அவள் தயங்கித்தயங்கி கிருஷ்ணனைப்பார்க்கச்செல்வதும் பார்த்ததுமே மகளாக ஆவதும் அவர் அவளிடம் அவளுடைய அப்பாவைப்பற்றியும் ஊரைப்பற்றியும் சொல்வதுமெல்லாம் அழகான இடங்கள். தாரையின் முகமே கண்னெதிரே வருகிறது. நீங்கள் அவளை வர்ணிக்கவே இல்லை என்றாலும்கூட தெரிகிறது


சந்திரா