Tuesday, January 9, 2018

குருதி



அன்புள்ள ஜெ,

குருதிச் சாரல் என ஏன் பெயரிட்டீர்கள் என இப்போது தெரிகிறது. உயிரோடு இருக்கும், இருக்கப்போகும் (பீஷ்மரைத் தவிர) ஒவ்வொரு ஆணும் மைந்தரை இழக்கப்போகும் அன்னியரால் குத்தி, கிழிக்கப்படுகையில் தெறிக்கும் குருதியின் சாரல். முடிவெடுக்க இயலாதவர்கள் சிந்தியே ஆக வேண்டிய குருதி. முடிவெடுத்த அனைவரும் சலனமில்லாமால் இருக்கிறார்கள். இயலாதவர்கள் மட்டும் சிந்தாகூலப் பட்டுக் கொண்டே தத்தமது நிலைக்கான வெவ்வேறு காரணங்களை அடுக்கிக் கொண்டே இருக்கிறார்கள். பார்க்கப்போனால் துரியன் உட்பட இறக்கப்போகிறவர்கள் நிலை எவ்வளவோ பரவாயில்லை போல. இன்று பீமன் கூறும் 'முடிவெடுக்கத் தான் தெய்வங்கள் தேவை' என்ற வரி தந்த அதிர்வு இன்னும் குறையவில்லை.

உண்மையில் திரௌபதியின் பிறப்போடு துருவன் ஏன் இணைக்கப்படுகிறான் என்பதன் விடையாக தற்போதைய திரௌபதியின் நிலையைச் சொல்லலாம். தெளிவாக வஞ்சத்தை விட்டொழித்தேன் எனக் கூறுவதன் மூலம் அங்கே நிகழும் அனைத்தையும் கடந்து, நிலைத்து நிற்பவளாக அவள் இருக்கிறாள்.

அன்புடன்,
அருணாச்சலம் மகராஜன்