Monday, February 12, 2018

பெண்ணின் கதை



அன்புள்ள ஜெ


ஒவ்வொரு பெண்ணின் கதையும் ஒவ்வொரு முழுமையை வந்து அடைகிறது. அதற்குப்பின்னர்தான் அவர்களின் முழு குணாதிசயத்தையும் அங்கிருந்து திரும்பிச்சென்று உணரமுடிகிறது. வெண்முரசின் இந்தச்சிறப்பை பலந்தரையின் கதாபாத்திரத்திலும் காணலாம். தன்னை வேண்டுமென்றே தூக்கிவந்துவிட்டான் பீமன் என்னும் எண்ணம் அவள் மனதிலிருப்பது தெரிகிறது. அவளுக்கு அஸ்தினபுரியின் அரசியாகி அதிகாரம் அடைய ஆசையிருந்ததோ என்ற ஐயம் அவ்வப்போது எழுகிறது. ஆனால் அவளை மணக்கைவிருந்த துச்சாதனனைப்பற்றி அவள் எங்குமே எண்னவில்லையே, அந்த ஆசை உண்மையில் உண்டா என்றே நான் சந்தேகப்பட்டேன். ஆனால் அவளுடைய மனதிலிருந்தது வேறு என இப்போது தெரிந்தது. அவள் அழகி இல்லை. முதல்முறையாக திரௌபதி அவளை அணைத்தபோது அவள் தோளுக்குக்கீழே குறுகி நின்றிருந்தாள். அவள் கண்ட அரண்மனையும் மிகப்பெரிது. அங்கிருந்து ஆரம்பித்தது. அவளுக்குக் கிடைத்த பீமனின் ஆற்றலை அவள் அறிவாள். அதை அவள் உணர்ந்துகொண்டதுமே அவளுக்கு நிறைவு வந்துவிட்டது


எஸ்